என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பர்வேஸ் முஷரப்
நீங்கள் தேடியது "பர்வேஸ் முஷரப்"
துபாயில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், அவர் மீதான தேச துரோக வழக்கில் முறையாக ஆஜராகாவிட்டால், அவமானப்பட வேண்டி இருக்கும் என பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். #PervezMusharraf #PakistanSC
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். அவர்மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் அவர் போக்குகாட்டி வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது முஷரப்பின் உடல்நிலை சீராக இல்லை எனவும், அதன் காரணத்தால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனவும் தெரிவித்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார், ஒருவேளை முஷரப் ஒழுங்காக ஆஜர் ஆகாவிட்டால், கருணையின்றி வலுக்கட்டாயமாக அவர் ஆஜர்படுத்தப்படுவார் என மிக கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அடுத்த ஒருவாரத்துக்குள் முஷரப்பின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #PervezMusharraf #PakistanSC
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். அவர்மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் அவர் போக்குகாட்டி வருகிறார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது முஷரப்பின் உடல்நிலை சீராக இல்லை எனவும், அதன் காரணத்தால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அடுத்த ஒருவாரத்துக்குள் முஷரப்பின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #PervezMusharraf #PakistanSC
பாகிஸ்தானை அமெரிக்கா தேவைப்படும் போது பயன்படுத்திக்கொண்டு தேவையில்லாத போது கழற்றிவிட்டு விடுகிறது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் குற்றம்சாட்டியுள்ளார். #PervezMusharraf
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் இன்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானை தேவைப்படும் போது அமெரிக்காபயன்படுத்திக்கொண்டு தேவையில்லாத போது கழற்றிவிட்டு விடுகிறது. பனிப்போர் காலகட்டங்களில் இருந்தே அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா அணி சேர்ந்துள்ளது, பாகிஸ்தானை வெளிப்படையாக பாதிக்கும்.
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை ஐக்கிய நாடுகளில் சபையில் விவாதிக்க இருக்கிறோம். இந்த பிரச்சனையில் ஒரு பக்க அணுகுமுறை இருக்குமானால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
எங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு பின்னர் மீண்டும் எதற்காக அமெரிக்கா தேடி வருகிறது என்பதற்கான காரணம் பாகிஸ்தான் மக்களுக்கு விளங்கவில்லை. மேலும், தேவைப்படும் போது எங்களை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டு தேவையில்லாத சந்தர்ப்பங்களில் கழற்றிவிட்டு விடுவதையும் பாகிஸ்தானியர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். #PervezMusharraf
×

X